பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் காமராஜர் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்துடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ் தலைமையில் அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், நகர செயலாளர் முருகேசன், இளைஞர்அணி தலைவர் இளயராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்து மரியாதை

இதேபோல் திருமானூரில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் வடிவழகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமானூரில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் தனபால் தலைமையில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் லதாபாலு, மாவட்ட இலக்கிய அணி சக்திவேல், ஒன்றிய மகளிர் அணி துணை செயலாளர் கஸ்தூரி கருணாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com