இன்று நடைபெறவுள்ள பிளஸ்-1 பொதுத்தேர்வினை 8,602 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள பிளஸ்-1 பொதுத்தேர்வினை 8,602 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள பிளஸ்-1 பொதுத்தேர்வினை 8,602 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
Published on

பெரம்பலூர்,

தமிழகத்தில் முதன் முறையாக பிளஸ்-1 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அந்த வகையில், 2017-18-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (புதன் கிழமை) தொடங்குகிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 27 மையங்களில் பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற இருக் கிறது. இத்தேர்வில் 4,284 மாணவர்களும், 4,318 மாணவிகளும் என மொத்தம் 8,602 பேர் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வு மையத்திற்கு முதன்மை கண்காணிப்பாளர்களாக 27 தலைமையாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 27 தேர்வு மையத்திற்கும் 27 துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலராக 7 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் 9 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத் தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர் களாக 556 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட் டுள்ளனர். மேலும் இத்தேர்வுகள் நல்ல முறையில் நடைபெற 71 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தலின் பேரில் தேர்வு மையங்களுக்கு மாணவ-மாணவிகள் எளிதில் சென்று வரு வதற்கு ஏதுவாக பஸ் வசதி மற்றும் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தயார் நிலையில் இருக்கின்றன. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். இன்று தொடங்குகிற பிளஸ்-1 தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com