

மதுரை,
மதுரை ஜீவாநகரைச் சேர்ந்தவர் சையதுநூர்தீன் மவுலானா (வயது 58). சம்பவத்தன்று இவர் ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் திரும்பி வந்த போது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசில் அவர் புகார் செய்திருந்தார். அதில் வீட்டில் வேலை செய்யும் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் போலீசார் ராஜேஸ்வரியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தான் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து ராஜேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.