நெய்யூர் பகுதியில் சாலையில் கத்தியுடன் நடமாடிய வாலிபர்

நெய்யூர் பகுதியில் சாலையில் கத்தியுடன் நடமாடிய வாலிபர் சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சியால் பரபரப்பு.
நெய்யூர் பகுதியில் சாலையில் கத்தியுடன் நடமாடிய வாலிபர்
Published on

பத்மநாபபுரம்,

திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலையில் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கடையின் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் தினமும் காலையில் கடையை திறந்தவுடன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை பார்ப்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, கடையின் முன்பு சாலையில் ஒரு வாலிபர் கையில் கத்தியுடன் நடமாடுவதை கண்டார். அந்த நபர் ஆட்கள் வரும்போது மறைவான இடத்தில் பதுங்குவதும், பின்னர் வெளியே வருவதுமாக இருந்தார். அவர் சாலையில் செல்வோரிடம் நகை பறிக்கும் முயற்சியில் சுற்றித்திரிந்தாரா? அல்லது யாரையாவது கொலை செய்யும் நோக்கத்தில் நடமாடினாரா? என்பது தெரியவில்லை.

இந்த காட்சி தற்போது தக்கலை சுற்றுவட்டாரத்தில் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர் ச்சி அடைந்துள்ளனர். சாலையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த வாலிபரை பிடிக்க போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com