

சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர், மணப்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தில் தலையில் எண்ணெய் மசாஜ் செய்ய சென்றார். அவருக்கு மசாஜ் செய்த மணிகண்டன் (வயது 25) திடீரென மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி தனது தாயிடம் கூறினார். அவர், இது தொடர்பாக பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.