பால் பதப்படுத்தும் நிலையத்தில் முறைகேடு: ஆவின் மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்லில் பால் பதப்படுத்தும் நிலையத்தில் முறைகேடு செய்ததாக ஆவின் மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பால் பதப்படுத்தும் நிலையத்தில் முறைகேடு: ஆவின் மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் தொழிற்பேட்டையில் ஆவின் பால் பதப்படுத்தும் நிலையம் செயல்படுகிறது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால், இங்கு பதப்படுத்தப்படுகிறது. பின்னர் அவற்றை பாக்கெட்டுகளில் அடைத்து, பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் இங்கு பாலில் இருந்து பால்கோவா, பால் பவுடர் உள்ளிட்ட பால் பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பால் பதப்படுத்தும் நிலையத்தில் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

அப்போது பால் கொள்முதல், பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆவின் நிர்வாகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பால் பதப்படுத்தும் நிலையத்தின் மேலாளர் தினகரபாண்டியன், துணை மேலாளர் இந்துமதி, தொழில்நுட்ப ஊழியர் சந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் ஆவின் பொதுமேலாளர் ராமநாதன் நேற்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com