குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்எதிரேயே பெண் பலி

குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்எதிரேயே பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், லாரி கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.
குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்எதிரேயே பெண் பலி
Published on

கணவன்-மனைவி

சோழவரத்தை அடுத்த காரனோடை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 45). இவருடைய மனைவி பரிமளா (வயது 40). சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள இவர்களது உறவினர் ஒருவர் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கிறார். அவரை வழி அனுப்பி வைப்பதற்காக பிரேம்குமார்-பரிமளா இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மூலக்கடை அடுத்த எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இவர்கள் சென்றபோது, பின்னால் வந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

அப்போது பரிமளா மீது குப்பை லாரியின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய பரிமளா, கணவரின் கண் எதிரேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பிரேம்குமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயம் அடைந்த பிரேம்குமாரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பலியான பரிமளாவின் உடலை மீட்டு பிரேத பரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கண்ணாடி உடைப்பு

இதற்கிடையில் லாரி சக்கரத்தில் சிக்கி பரிமளா உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், குப்பை லாரியின் முன்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பை லாரி டிரைவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com