

தேனி :
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சியில் பெருமாள்புரம் கிராமம் உள்ளது.
இங்கு கும்பக்கரை அருவிக்கு செல்லும் சாலையில் 3 மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதில் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதியில் ஆட்டோ நிறுத்தம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோன்று கும்பக்கரை அருவிக்கு செல்லும் வழியில் சோதனைச் சாவடி அருகேயும் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.
எனவே சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றியமைக்க மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.