லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றச்செயல் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றச்செயல் என மாணவ-மாணவிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று லஞ்சம் கொடாதோர் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றச்செயல் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட லஞ்சம் கொடாதோர் இயக்கத்தின் ஆண்டு விழா தஞ்சையில் நடந்தது. விழாவுக்கு இயக்கத் தின் மாவட்ட தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆதி.நெடுஞ்செழியன் வரவேற்றார். அமைப்பாளர் அக்ரி செல்வ ராஜ், இணைச்செயலாளர் செந்தில் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்ட மைப்பு மாநிலதலைவர் மணிவேல், தஞ்சை நில எடுப்பு தனி தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். விழாவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றச்செயல் என்கிற விளம்பர பதாகைகளை வைத்து பொது மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி வாழ வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.

ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிக்கு ஆதரவாக மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்த அறிவுரைகளை நடைமுறைப் படுத்த வலியுறுத்துமாறு மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்வது.

தஞ்சை-நாகை இடையேயான இரு வழிச் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இந்த பணிகளை மீண்டும் தொடங்கி விரைவுபடுத்த வேண்டும். தஞ்சையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இயக்க நிர்வாகிகள், உறுப் பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com