மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா

நாமக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா
Published on

நாமக்கல்,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாள் விழா நாமக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.

திருச்செங்கோட்டில் நகர தி.மு.க. சார்பில் அவரது உருவ படத்திற்கு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 33 வார்டுகளிலும் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராசிபுரம் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், காந்தி மாளிகை அருகில் உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதியின் உருவப்படத்தை மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர். கருணாநிதியின் உருவப்படம் பதித்த பிளக்ஸ் பேனர்களும் வைத்திருந்தனர். தி.மு.க. கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப் பட்டது. குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பென்சில் ஆகியவற்றை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன்தாஸ், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் ராஜேஸ்பாபு, துணை அமைப்பாளர் புவியரசு, நகர அவைத்தலைவர் அமிர்தலிங்கம், நகர துணைச் செயலாளர்கள் ரவிசந்திரன், ஆனந்தன், பொருளாளர் நாகேஸ்வரன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், கேசவன், மாணவர் அணி அமைப்பாளர் தரணிபாபு, துணை அமைப்பாளர் யோகராஜன், ஜெ.கே.நடராஜன், ஆறுமுகம், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்தி வேலூர் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தி.மு.க. நகர செயலாளர் மாறப்பன் தலைமையில், தி.மு.க பிரமுகர் கண்ணன் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரதாப் சக்ரவர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தர், நகர துணைச் செயலாளர் முருகன் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பரமத்தி வேலூர் நான்கு ரோட்டில் இருந்து தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலை வந்தடைந்தனர். பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல நாமக்கல் மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com