

ஆர்.பி.எப். போலீசார் அவரை சமாதானப்படுத்தினார்கள். அவர்களிடமும் தகராறு செய்தார். அதன்பிறகு ரெயில்வே போலீசார் சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முற்பட்டனர். அவர் வெளியில் போக மறுத்து சண்டை போட்டார். அவரது பெயர் சபரிக்குமார் (வயது 28) என்றும், பெரியமேடு குற்றப்பிரிவு போலீசில் அவர் பணிசெய்வதும் தெரிய வந்தது.
அவர் மீது பெரியமேடு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பெரியமேடு போலீசார் அவரை அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அவர் தகராறு செய்த சம்பவம் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.