செயற்கையான விலைவாசி ஏற்றத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செயற்கையான விலைவாசி ஏற்றத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
செயற்கையான விலைவாசி ஏற்றத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை; வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிக்கை
Published on

ஊரடங்கு

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் நோய்த்தொற்று வல்லுநர்களோடும், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளோடும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களோடும், தொழில்துறை மற்றும் வணிகத்துறை வல்லுநர்களோடும் கலந்தாலோசித்து, கனத்த இதயத்துடன் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை எடுத்துக்கூறி, அதற்கு வணிகர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியம் என்பதை வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்தார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர் நலன் மட்டுமே அல்லாது, பொதுமக்கள் நலனிலும் அக்கறை கொண்ட அமைப்பு என்பதை நிரூபிக்கும் விதமாக, ஒரு நாள் மட்டுமே கடைகள் இயங்கும் என்பதற்கு மாற்றாக நேற்றைக்கும் (நேற்று முன்தினம்) சேர்த்து 2 நாளாக முழுமையாக கடைகள் திறந்திருக்கும் என்பதை முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து, நேற்றும் (நேற்று முன்தினம்), இன்றும் (நேற்றும்) முழுமையாக அனைத்து கடைகளும் இயங்க முதல்-அமைச்சர் அறிவித்ததற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

நிர்பந்தம் ஏற்படும்

மேலும் காய்கறி, பழம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி ஊரடங்கு நாட்களிலும் கிடைத்திட, நேரடி வினியோகம் செய்திட, சென்னையை பொறுத்தவரையில், கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக இயங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பழங்களை வாகனங்களில் நேரடியாக கொண்டு சென்று அந்தந்த பகுதிகளிலேயே வினியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஒரு சில கருப்பாடுகள் செயற்கையான விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி வருவதாக வரும் தகவல்களை அடுத்து, அதுபோன்ற கருங்காலிகளை பேரமைப்பு வன்மையாக எதிர்ப்பதோடு, மக்களுக்கு துரோகம் செய்யும் அதுபோன்ற நபர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து

பேரமைப்பு கட்டாயம் நீக்கிவிடக்கூடிய நிர்பந்தம் ஏற்படும். விலைவாசி உயர்வு என்ற பேச்சுக்கே தமிழகத்தில் இடமிருக்கக்கூடாது என்பதை தார்மீக தர்ம சிந்தனையாக அனைத்து வணிகர்களும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com