மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
Published on

கரூர்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் தேசியநெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிவேகத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் பந்தயம் நடத்துவதாகவும், இதனால் அங்கு பயணத்தை மேற்கொள்ளும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அந்த வாகனம் பறிமுதல் செய்யப் படுவதுடன், அந்த நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பின்னால் அமர்ந்து செல்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதனை மீறுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் சாலைவிதிகளை கடை பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com