

மதுரை,
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இலங்கையில் இருந்து சென்னை, மதுரைக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் சென்றன. இதன் தொடர்ச்சியாக இலங்கையில் இருந்து சென்னை, மதுரைக்கு வரும் விமான பயணிகளிடம் தீவிர சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் தங்கம் பிடிபட்டது.