திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்ட பலன்கள் கிடைக்க நடவடிக்கை

திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்ட பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்ட பலன்கள் கிடைக்க நடவடிக்கை
Published on

திருத்துறைப்பூண்டி,

தமிழக அரசின் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கருக்கு இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. 50 சதவீத மானியத்தில் விதைகள், ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் இலவசமாக வழங்கப்படுகிறது. பசுந்தாள் உர விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் இடுபொருள் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆலத்தம்பாடி மற்றும் கச்சனம் பகுதி விவசாயிகள் ஆலத்தம்பாடியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அங்கு விவசாயிகள் வரிசையில் காத்திருந்து குறுவை தொகுப்பு திட்டத்துக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.

அனைத்து விவசாயிகளுக்கும்...

அப்போது அங்கு சென்று ஆய்வு செய்த வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் கூறுகையில், குறுவை தொகுப்பு திட்டத்தில் பலன்கள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்கு உரிய திட்டம் வகுக்கப்பட்டு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com