திருப்பத்தூர் பகுதியில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

திருப்பத்தூர் பகுதியில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் புதிய சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேட்டி
திருப்பத்தூர் பகுதியில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சப்-கலெக்டராக இருந்த கார்த்திகேயன் நாகப்பட்டினத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய சப்-கலெக்டராக மயிலாடுதுறையில் இருந்து பி.பிரியங்கா பங்கஜம் நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஐ.ஏ.எஸ். முடித்து முதலில் மயிலாடுதுறையில் பணிபுரிந்தேன். அங்கிருந்து திருப்பத்தூருக்கு வந்து பொறுப்பேற்று உள்ளேன். திருப்பத்தூரில் உள்ள பிரச்சினைகள் குறித்து அறிந்து வருகிறேன். பொதுமக்கள் யாராக இருந்தாலும் அலுவலகத்தில் என்னை சந்தித்து மனு அளிக்கலாம். ஆலோசனை வழங்கலாம். திருப்பத்தூர் பகுதியில் மணல் கடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். திருப்பத்தூரில் முக்கிய பிரச்சினையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு சிறப்பு திட்டம் தயார் செய்து, நடைமுறைப்படுத்தப்படும். விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கூறினார். அப்போது நேர்முக உதவியாளர் பாக்கியலட்சுமி உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com