நடிகை கங்கனா வீடு இடிக்கப்பட்டதில் ஏதோ மர்மம் உள்ளது ஐகோர்ட்டு கருத்து

நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிக்கப்பட்டதில் ஏதோ மர்மம் உள்ளது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
நடிகை கங்கனா வீடு இடிக்கப்பட்டதில் ஏதோ மர்மம் உள்ளது ஐகோர்ட்டு கருத்து
Published on

மும்பை,

சிவசேனாவுடன் மோதல் ஏற்பட்ட நிலையில் மும்பை பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி அதை கடந்த 9-ந் தேதி மாநகராட்சி இடித்து தள்ளியது.

இதை எதிர்த்து கங்கனா மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டார். மேலும் மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டார். இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் காதவாலா, சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.

அப்போது நீதிபதிகள், கங்கனாவின் வீடு அருகே உள்ள சில கட்டிடங்களிலும் விதிமுறை மீறல்கள் நடந்தும் பல நாட்களாக அங்கு இடிக்கும் பணிகள் எதுவும் மேற்கொள்ளாததையும், மேலும் மற்ற சம்பவங்களில் இடிக்கும் பணிகள் நடைபெறும் போது மாநகராட்சியினர் புகைப்படங்கள் எடுத்து உள்ளனர். ஆனால் கங்கனா வீடு இடிக்கப்படுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்ட போது அப்படி எதுவும் படங்கள் எதுவும் எடுக்கப்படாததையும் சுட்டி காட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள் இதுகுறித்து மாநகராட்சி தரப்பு வக்கீலிடம், மாநகராட்சி தரப்பு வக்கீல் சகாரே, இதில் கண்டிப்பாக ஏதோ மர்மமாக உள்ளது. செப்டம்பர் 8-ந் தேதி நடந்ததற்கான புகைப்படம் எதுவும் இல்லை. இடிக்கும் பணி எப்படி 8-ந் தேதி நடைமுறையில் இல்லாமல் போகும். நாங்கள் அதற்கான கோப்புகள் கேட்ட பிறகு அது தயாரிக்கப்பட்டதா?. இதற்கு எதுவும் பதில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com