நடிகை பாயல் கோஷ் கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்யாவிட்டால் போராட்டம் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு

நடிகை பாயல் கோஷ் கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
நடிகை பாயல் கோஷ் கற்பழிப்பு வழக்கில் இயக்குனர் அனுராக் காஷ்யப்பை கைது செய்யாவிட்டால் போராட்டம் - மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே அறிவிப்பு
Published on

மும்பை,

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் கற்பழிப்பு புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் படவாய்ப்பு கேட்டு அவரது வீட்டுக்கு சென்ற போது இயக்குனர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாயல் கோஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த புகார் குறித்து மும்பை வெர்சோவா போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதாக குற்றம்சாட்டிய நடிகை பாயல் கோஷ் தனக்கு நீதி கிடைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் பாலியல் புகார் தொடர்பாக நேற்று இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே, நடிகை பாயல் கோசுடன் மும்பை போலீஸ் இணை கமிஷனர் விஸ்வாஸ் நன்காரேயை சந்தித்து பேசினார். பின்னர் ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, நடிகைக்கு எந்த அநீதியும் இழைக்கப்பட கூடாது என போலீசாரை வலியுறுத்தி உள்ளேன். எனது கட்சியினரும் நடிகைக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். 7 நாட்களில் அனுராக் காஷ்யப்பை கைது செய்யவில்லை என்றால் இந்திய குடியரசு கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.

இதேபோல நடிகை கங்கனா ரணாவத்துக்கும், சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போது, முதல் ஆளாக அந்த நடிகைக்கு ராம்தாஸ் அத்வாலே ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com