ஆடலூர் பகுதியில், தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் - பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்

ஆடலூர் பகுதியில் தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.
ஆடலூர் பகுதியில், தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் - பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்
Published on

பெரும்பாறை,

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான கே.சி. பட்டி, ஆடலூர், மருமலை, பெரியூர், நடுப்பட்டி, குப்பம்மாள்பட்டி, பள்ளத்துக்கால்வாய், சேம்படி ஊத்து உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் புகுந்து வருகிறது. குறிப்பாக காட்டுயானைகள் தோட்டங் களில் அமைக்கப்பட்டிருக்கும் முள்வேலி, சோலார் வேலிகளை உடைத்து கொண்டு அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள காபி, வாழை, ஆரஞ்சு, மிளகு, அவரை, பீன்ஸ், சவ்சவ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் ஆடலூர், கே.சி.பட்டி பகுதியில் சில நாட்களாக 7 யானைகள் தோட்டங்களுக்குள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தது. காபி, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்தது. இதனால் தோட்டங் களுக்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் கன்னிவாடி வனச்சரகர் ரவிசந்திரன் தலைமையில் வனவர் தண்டபாணி, வனக்காப்பாளர் சங்கர் மற்றும் வன ஊழியர்கள் கே.சி.பட்டி, ஆடலூர் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுயானைகள், சிறுவாட்டுகாடு வனப்பகுதிக் குள் விரட்டப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும், தோட்டங் களுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com