புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை; பூக்கள் கொடுத்து வரவேற்றனர்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகளை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு டீன் பூவதி பூக்கள் கொடுத்து வரவேற்றதை படத்தில
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு டீன் பூவதி பூக்கள் கொடுத்து வரவேற்றதை படத்தில
Published on

முதலாமாண்டு மாணவர்கள்

மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வில் மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்தவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தனர். அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் 150 பேர் நேற்று கல்லூரியில் சேர்ந்தனர்.

இதன் தொடக்க நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் சிலர் மருத்துவ சீருடையான வெள்ளை நிற கோட் அணிந்து வந்திருந்தனர். அவர்களுடன் பெற்றோரும் வந்தனர். மாணவ-மாணவிகளை டீன் பூவதி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மாணவ-மாணவிகள் உற்சாகமுடன் காணப்பட்டனர்.

பிப்ரவரியில் வகுப்புகள் தொடக்கம்

இதேபோல அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் வந்த மாணவ-மாணவிகளும் தங்களது மருத்துவ கனவு நிறைவேறும் வகையில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததை உணர்ந்தனர். மாணவ-மாணவிகள் சேர்க்கை ஆணை உள்பட கட்டணங்களை செலுத்தி சேர்த்தனர். நிகழ்ச்சியில் டீன் பூவதி பேசுகையில், மாணவ-மாணவிகள் நல்ல முறையில் படித்து டாக்டராகி நன்றாக சேவையாற்ற வேண்டும். படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, உங்களது கனவையும் நனவாக்க வேண்டும். கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்' என்றார். முதலாமாண்டு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல மாணவ-மாணவிகள் அன்றைய தினம் வரும் போது கொரோனா பரிசோதனை எடுத்து அதன் முடிவின் நகலை கொண்டு வர வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com