துறையூர் தொகுதி பச்சைமலையில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு மலைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு

பச்சைமலையில் வாக்கு சேகரிக்க சென்றபோது, அவருக்கு மலைவாழ் மக்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துறையூர் தொகுதி பச்சைமலையில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்திக்கு மலைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு
Published on

துறையூர்,

துறையூர் தனி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார். அவர், பச்சைமலையில் வாக்கு சேகரிக்க சென்றபோது, அவருக்கு மலைவாழ் மக்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் உற்சாகமடைந்த வேட்பாளர் இந்திராகாந்தி, மலைவாழ் மக்களுடன் சாதாரணமாக பேசி அரசின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச கேபிள் டி.வி., பிள்ளைகளின் கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மலைவாழ் மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் கூடுதல் பஸ்கள், மலைகளில் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய உப்பிலியபுரம் பகுதியில் காய்கறி சந்தை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது ஒன்றிய செயலாளர்கள் அழகாபுரி செல்வராஜ், ராம்மோகன், சேனை செல்வம், வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், தென்புற நாடு ஊராட்சி தலைவர் பானுமதி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர் சிவக்குமார், முன்னாள் சேர்மன் மனோகரன், உப்பிலியபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவா மைவிழி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியலட்சுமி, சுஜாதா, வளர்மதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு இந்திராகாந்திக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com