

பாவூர்சத்திரம்,
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம் மற்றும் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். வாக்குச்சாவடி வாரியாக இளைஞர் பாசறைக்கு நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக மாநில அமைப்பு செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், பேரூர் செயலர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சேர்மபாண்டி நன்றி கூறினார். இதேபோல் தென்காசி பேரவை தொகுதி இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திலும், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் தமிழக அரசின் இலவச முககவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம் தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ஆதிநாராயணன், கூட்டுறவு சார் பதிவாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அ.தி.மு.க. செயலாளர் சுடலை வரவேற்றார். நிகழ்ச்சியில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கினார். சங்க துணை தலைவர் முத்துகுமாரசாமி, நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.