அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளனர் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
Published on

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் வல்லம், வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செல்ல பிராட்டியில் நடைபெற்றது. இதற்கு வல்லம் வடக்கு ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். பேரவை ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரூ 2500 மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதை பொறுத்துக்கொள்ளமுடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நீதி மன்றத்தை நாடி பொங்கல் பரிசை வழங்ககூடாது என தடை கோரியுள்ளார். தி.மு.க. உறுப்பினர்கள் ஒரு கோடி பேர் உள்ளதாக கூறுகிறீர்கள். நீங்கள் வேண்டுமானால் ஒரு கோடி பேரின் பொங்கல் பரிசு தொகையான ரூ .100 கோடியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு திருப்பி தருவாரா?.

அ.தி.மு.க.மக்கள் கட்சி, தி.மு.க. குடும்ப கட்சி என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருந்து வருகின்றனர்.

ஆனால் கடந்த 2006-11 தி.மு.க. ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகள் கொஞ்சம் அல்ல. பெண்கள் நடமாட முடியாத நிலையில் ஆட்சியை தி.மு.க. நடத்தியது.

அடுத்த ஆண்டு பொன் விழா காணும் அ.தி.மு.க.வை உடைக்க சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் தான் ஜெயலலிதா கூறியது போல் அ.தி.மு.க. 100 ஆண்டுகாலம் நிலைத்து நிற்கும்.

கருத்து வேறுபாடுகளை மறந்து, ஜாதி, மத, பேதமில்லாமல் ஒற்றுமையாக பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்குவோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் வக்கீல் கதிரவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சுகுமார், மாவட்ட வக்கீல் அணி வேலவன், மாவட்ட இளைஞரணி சகாதேவன், மாணவரணி ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், சேட்டு, பேரவை ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய பொருளாளர் அசோக் , கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காமராஜர், முருகேசன், மாவட்ட பிரதிநிதி ஜீவா, ரவி, தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் ஏ.பி.எஸ். தமிழ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் வெங்கடேசன், மஞ்சுளா குமார், மகளிரணி ஒன்றிய செயலாளர் அமிர்த குமாரி, ராஜா , இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் எம்.ஜெ. சேகர், இளைஞரணி ஒன்றிய தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய இணைச் செயலாளர் கீதாசெல்வம், ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் அம்புரோஸ், பேரவை ஒன்றிய துணை செயலாளர் தனசேகர், வல்லம் நடராஜ், முன்னாள் தலைவர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கல்விக்குழு தலைவர் ஆனந்தி அண்ணாதுரை நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com