ஈரோடு-கோவை சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

ஈரோடு- கோவை சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
ஈரோடு-கோவை சாலையில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
Published on

கரூர்,

கரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று காந்திபுரம், 80 அடி சாலை செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம் மெயின்ரோடு, நரசிம்மபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்தனர். வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த அவருக்கு சிறுவர், சிறுமிகள் ரோஜாப்பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள திரு.வி.க. காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. வாங்கல் அரசு சாலையில் இருந்து வெங்கமேடு ரெயில்வே மேம்பாலம் வரை புறவழிச்சாலை அமைக்கப்படும். சுக்காலியூர் முதல் விஸ்வநாதபுரி பிரிவு வரை புறவழிச்சாலை அமைக்கப்படும். அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விஸ்வநாதபுரி முதல் மண்மங்கலம் வரை கோயம்பள்ளி, மேலப்பாளையம் வழியாக கட்டி முடிக்கப்பட்டு, அமராவதி பாலம் வழியாக வெள்ளாளப்பட்டி தேசிய நெடுஞ்சாலை வரை சுற்றுவட்ட சாலை அமைக்கப்படும்.

நெரூர்-உன்னியூர் பாலம் அமைக்கப்படும். ஈரோடு-கோவை ரோடு சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். அரசு காலனி முதல் வாங்கல், மோகனூர் பாலம் வரை சென்டர் மீடியன் அமைத்து உயர்மின் விளக்குகள் அமைத்து தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com