ராகுல்காந்தியுடன் ஆலோசித்த பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் சித்தராமையா பேட்டி

“காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசித்த பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்” என்று சித்தராமையா கூறினார்.
ராகுல்காந்தியுடன் ஆலோசித்த பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் சித்தராமையா பேட்டி
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசித்த பிறகு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று சித்தராமையா கூறினார்.

கர்நாடக அரசு சார்பில் நாட்டில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராம் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மந்திரிசபை விரிவாக்கம்

இதையொட்டி, பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் உள்ள பாபு ஜெகஜீவன்ராம் சிலையின் பீடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சித்தராமையா நிருபர் களிடம் கூறியதாவது:-

மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஸ்ராவன, ஆசாட மாதங்கள், அமாவாசை தினம் என்று எதுவும் தடையாக இல்லை. நான் முன்பு டெல்லி சென்றபோது எங்கள் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க முடியவில்லை. இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது தாமதமாகி உள்ளது.

தண்ணீரை திறந்துவிட்டுள்ளோம்

ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். மந்திரிசபையில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. மந்திரிசபையை மாற்றி அமைக்கும் திட்டம் இல்லை. காவிரி நீர் தொடர்பாக தமிழக அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளது.

நம்முடைய மக்களுக்கு நீர் தேவைப்படுகிறது. மழை பற்றாக்குறையாக உள்ளது. அணைகளுக்கு நீர்வரத்தும் இல்லை. இத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளோம். நம்முடைய விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை.

விவசாயிகளின் நலன் முக்கியம்


கர்நாடக மக்களின் நலனை மனதில் வைத்து நமது வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடுவார்கள். நமக்கு நமது விவசாயிகளின் நலன் மிக முக்கியம். அதனால் சுப்ரீம் கோர்ட்டுக்கு நமது நிலைமையை எடுத்துக் கூறுவோம். பா.ஜனதாவினருக்கு மனிதாபிமானம் என்பதே இல்லை. ஆனால் ஆதிதிராவிடர்கள் பற்றி மட்டும் பேசுகிறார்கள்.

பாபுஜெகஜீவன்ராம் அரசியலில் முதிர்ந்த அனுபவத்தை பெற்று இருந்தார். அவர் நிர்வகிக்காத இலாகாக்களே இல்லை. அவருடைய குடும்பத்தை சேர்ந்த மீராகுமார் எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாங்கள் அவரை ஆதரிக்கிறோம். மீராகுமார் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com