மீண்டும் மணல் குவாரி தொடங்கியதற்கு எதிர்ப்பு: கொள்ளிடம் ஆற்றை தாயாக சித்தரித்து சவ ஊர்வலம் 10 பேர் கைது

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் மணல் குவாரி தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஆற்றை தாயாக சித்தரித்து நூதன முறையில் சவ ஊர்வலம் போராட்டம் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீண்டும் மணல் குவாரி தொடங்கியதற்கு எதிர்ப்பு: கொள்ளிடம் ஆற்றை தாயாக சித்தரித்து சவ ஊர்வலம் 10 பேர் கைது
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் அரசு மணல் குவாரி தொடங்கியதை கண்டித்து திருமானூர் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் தொடர் போராட்டங்களை கடந்த சில நாட்களாகவே நடத்தி வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே மணல் குவாரி அரசு அமைத்து அளவுக்கு அதிகமாக மணல் எடுத்து விட்ட நிலையில் மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அரசு தொடங்கியுள்ளது.

இதனால் சட்டவிரோதமாகவும், நீதியரசர்களுக்கு பொய்யான தகவல்களை கொடுத்து ஆற்று மணலை அள்ளியதால் கொள்ளிடம் தாய் மரணம் அடைந்துவிட்டாள் என்று கூறி, (கொள்ளிடம் ஆற்றை தாயாக சித்தரித்தனர்) பாடைகட்டி திருமானூர் வடக்குவீதி தேர்முட்டி பகுதியில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வழியாக சவ ஊர்வலம் கொள்ளிடம் சுடுகாடு சென்று அடக்கம் செய்யும் நூதன போராட்டம் நேற்று நடைபெறுவதாகவும், அது சமயம் ஊர்வலத்தில் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ள வேண்டும் என்று திருமானூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொள்ளிடம் தாய் சவ ஊர்வலம் நேற்று திருமானூர் ஊராட்சி அலுவலகத்தின் அருகே தொடங்கியது. முன்னதாக அதற்காக பெண்ணின் உருவ பொம்மையை மூங்கில் பாடையில் வைத்து கொள்ளிடம் தாய் மரணம் அடைந்து விட்டதாக பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த பாடையை 10 பேர் தோளில் தூக்கி சுமந்து கொள்ளிடம் சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்ய புறப்பட்டனர். அப்போது அவர்கள் திருமானூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே சென்ற போது சவ ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி, பாடையை கைப்பற்றினர். பாடையை சுமந்து சென்ற 10 பேரை கைது செய்தனர். கொள்ளிடம் தாய் சவ ஊர்வலம் திருமானூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com