தாளவாடி அருகே பரபரப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை துரத்திய யானைகள்; வாகனத்தை போட்டுவிட்டு ஓடி உயிர் தப்பினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன.
மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை துரத்திய யானைகளை படத்தில் காணலாம்.
மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை துரத்திய யானைகளை படத்தில் காணலாம்.
Published on

இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது அங்குள்ள வனச்சாலையை கடப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று மதியம் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட நெய்தாளபுரம் மலைக்கிராமத்தில் இருந்து 2 பேர் மோட்டார்சைக்கிளில் தாளவாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

சிக்கள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது யானைகள் கூட்டமாக அந்த வனச்சாலை பகுதிக்கு வந்தது. மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை கண்டதும் யானைகள் ஆவேசம் அடைந்து துரத்த தொடங்கின. உடனே அவர்கள் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றனர்.

அப்போது அங்குள்ள வேகத்தடையில் திடீரென மோட்டார்சைக்கிள் நின்று விட்டது. இதற்கிடையே யானைகள் அவர்களை நெருங்கி வந்தது. இதனால் பயந்து போன 2 பேரும் மோட்டார்சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினர். சிறிது நேரத்துக்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்களை யானைகள் துரத்திய சம்பவத்தால் அங்குள்ள மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com