கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

கோவை

தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வேளாண் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து கலெக்டரிடம் மனு கொடுக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏராள மான மாணவர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மறுபரிசீலனை

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர். பின்னர் சில மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரம் மாணவர்கள் கடந்த மாதம் செமஸ்டர் தேர்வு எழுதினோம். தற் போது 90 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்ததாகவும், மறு தேர்வு உடனடியாக எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

அம்பேத்கர் சிலை

கோவை கணபதி அருகே உள்ள தனியார் மில்லில் வடமாநில இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்தில் மில் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்று அம்பேத்கர் முகமூடி அணிந்து சமூக நீதி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்கள் கலெக்டரிடம் மனுவும் கொடுத்தனர்.

டாஸ்மாக் கடை

மதுபானக்கடை எதிர்ப்பு கூட்டமைப்பினர் அளித்த மனுவில், பீடம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கணபதி கார்டனில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு பஸ்நிறுத்தம் உள்ளதால் வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற தற்காலிக பணியாளர்கள் அளித்த மனுவில், இந்த மாதம் முதல் பணியில் இருந்து நீக்கப் பட்ட எங்களை, மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது.

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க சி.ஐ.டி.யு. அமைப்பினர் கொடுத்த மனுவில், டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. இதை மீண்டும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்றி அமைக்க வேண்டும், என்று இருந்தது.

இந்து முன்னணி சார்பில் கொடுத்த மனுவில், பேரூர் செட்டிபாளையம் அருகே உள்ள போஸ்டல் காலனியில் செயல்படும் ஆலயம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com