

திருவண்ணாமலை,
மாநில தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பாது செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். புதிய மின்சார சீரமைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட தலைவர் கிருபாகரன், மாவட்ட செயலாளர் பாண்டியன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 54 பேர் கைது செய்யப்பட்டனர்.