குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள்

தேனி மாவட்டத்தில் குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள்
Published on

தேனி:

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது உள்ள வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளித்து விவசாய பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேளாண்மை பொறியியல் துறை புதிய நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

மண் அள்ளும் எந்திரம், டிராக்டர், டயர் வகை மண் அள்ளும் எந்திரம், நிலம் சமன் செய்தல், உயர்பாத்தி அமைத்து விதைத்தல், காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல், வைக்கோல் கட்டுதல், வரப்பு செதுக்குதல் போன்ற பயன்பாடுகளுக்கான கருவிகள் மற்றும் எந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

இந்த எந்திரங்களை வாடகைக்கு பெற்று பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com