அரக்கோணத்தில் விவசாயிகளுக்கு ரூ.17 லட்சத்தில் வேளாண் கருவிகள் - சு.ரவி எம்.எல்.ஏ. வழங்கினார்

அரக்கோணத்தில் விவசாயிகளுக்கு, சு.ரவி எம்.எல்.ஏ. ரூ.17 லட்சத்தில் வேளாண் கருவிகள் வழங்கினார்.
அரக்கோணத்தில் விவசாயிகளுக்கு ரூ.17 லட்சத்தில் வேளாண் கருவிகள் - சு.ரவி எம்.எல்.ஏ. வழங்கினார்
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் வேளாண்மை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் பேபிபர்வதம் தலைமை தாங்கினார். அரக்கோணம் நகர அ.தி.மு.க. செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர் இ.பிரகாஷ், காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை துணை இயக்குனர் பாலா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் பேபிஇந்திரா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானியத்துடன் நெல் களை எடுக்கும் எந்திரம், பவர் டில்லர் உள்ளிட்ட பல்வேறு வேளாண் கருவிகளை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் நித்யா, துணை வேளாண்மை அலுவலர் சிவக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் சுகாதர், தென்னரசு, வட்டார தொழில்நுட்ப அலுவலர் ஹேமந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் முரளி நன்றி கூறினார்.

அப்போது சு.ரவி எம்.எல்.ஏ. அரக்கோணம் மார்க்கெட் காய்கறி கடை வியாபாரிகள் வி.எம்.பாஸ்கர் ஆகியோர் உதவி கலெக்டர் பேபிஇந்திராவிடம் கூறுகையில், அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மார்க்கெட் பகுதியில் உள்ள காய்கறி கடைகளை திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே காய்கறி கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு அவர் கோரிக்கைகள் குறித்து கலெக்டருக்கு தெரிவிக்கப்படும். அவரின் உத்தரவின்பேரில் தாசில்தார் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் ராஜவிஜயகாமராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com