தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைய மகளிரணி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்

தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்க மகளிரணி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மாநில செயலாளர் விஜிலா சத்தியானந்த் பேசினார்.
தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைய மகளிரணி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
Published on

சுசீந்திரம்,

குமரி மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் சுசீந்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி குறித்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மகளிர் அணி கிழக்கு மாவட்ட செயலாளர் ஹெப்சி பாய் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மகளிர் அணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

தமிழகத்தில் மீண்டும் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி மலர பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதற்காக மகளிர் ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூத் கமிட்டி அமைத்து வீடு, வீடாக சென்று அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும். ஒரு பூத் கமிட்டிக்கு 25 பேர் தேர்வு செய்து, அதில் சிறந்து விளங்குபவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர்கள் கட்சியைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.

வருகிற நாட்களில் ஒவ்வொரு ஒன்றியங்களாக மகளிர் அணி சார்பில் மக்களை சந்திக்க நான் வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கையேடு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பேசுகையில், மகளிர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசின் சாதனையை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். வருகிற 22-ந் தேதி குமரி மாவட்டம் வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதத்தில் பூத் கமிட்டி திறம்பட செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், வாக்காளர்களை சந்தித்து பூத் கமிட்டி அமைப்பது குறித்த கையேட்டை தளவாய்சுந்தரம் மற்றும் மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி. வழங்கினனர்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், துணைச் செயலாளர் ராஜன், இலக்கிய அணி செயலாளர் சதாசிவம், அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், பேரா சிரியர் நீலபெருமாள், கன்னியாகுமரி நகர செயலாளர் வின்ஸ்டன், நாகர்கோவில் நகர செயலாளர் சந்துரு, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், பொன் சேகர், வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், அணிச் செயலாளர்கள் சுகுமாரன், சுந்தரம், கண்ணன், ஒன்றிய அவை தலைவர் தம்பி தங்கம், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் ஞான ஜெயந்தி, தோவாளை எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.யூ.சி.மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்கம் மணிகண்டன், நிர்வாகிகள் தாணம்மாள், சீனிவாசன், லட்சுமி, ராஜபாண்டியன், குமரகுரு, குமார், வீரபத்திர பிள்ளை, ஷாஜீன் காந்தி, யூஜின், கலா, வடிவேல், மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் அணி மேற்கு மாவட்ட செயலாளர் பிரியா விஜி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com