கீரனூர் அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கொலையில் 9 பேர் மீது வழக்கு

கீரனூர் அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கொலை தொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மதுரையை சேர்ந்த கூலிப்படையினரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரனூர் அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கொலையில் 9 பேர் மீது வழக்கு
Published on

கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்துள்ள நமணராயசத்திரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 51). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவருக்கும், காரப்பட்டையை சேர்ந்த தொழிலதிபர் வீராச்சாமி (70) என்பவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்ததில் பணப்பிரச்சினை ஏற்பட்டது. இதில் சமரசம் பேசுவதற்காக களமாவூரில் உள்ள மூர்த்தி தோட்டத்திற்கு வந்த வீராச்சாமி, அவரது மகன் முத்து (30) ஆகிய 2 பேரையும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி மூர்த்தி தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் மூர்த்தி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். அவருடன் மேலும், 10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில் மூர்த்தி ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

முன்னாள் கவுன்சிலர் கொலை

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை திருச்சி-கீரனூர் சாலையில் களமாவூர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டீக்கடையில் மூர்த்தி டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மூர்த்தியை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் ரோடு வரை சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

9 பேர் மீது வழக்கு

இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் புதுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களை பார்வையிட்டனர். அதில் ஒரு கார் முன்னே செல்ல, அதன் பின்னால் 3 மோட்டார் சைக்கிள் களில் 6 பேர் செல்வது தெரிந்தது. அவர்களின் முகம் சரிவர தெரிய வில்லை.

இது தொடர்பாக கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப்- இன்ஸ் பெக்டர்கள் சந்திர காந்த், காம ராஜ், மாத்தூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டு, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட மூர்த்தியின் மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட வீராச்சாமியின் தம்பி குட்டார் என்கிற ஆறுமுகம், மூத்த மருமகன் கிண்ணனூரை சேர்ந்த பாக்கியராஜ், அவரது தந்தை சிவசங்கு, தம்பி ஜெயராமன், இளைய மருமகன் வீராச்சாமி மற்றும் உறவினர்கள் பழனிச்சாமி, முருகன், ஜெய், ஆனந்த் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதில் 3 பேரை பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், கொலை யில் ஈடுபட்டவர்கள் மதுரையை சேர்ந்த கூலிப் படையினர் என தெரியவந் துள்ளது. மேலும் அவர்கள் விராலிமலையில் ஒரு வாரம் தங்கியிருந்து, தினமும் மோட்டார் சைக்கிளில் வந்து மூர்த்தியின் அன்றாட நடவடிக்கைகளை கண் காணித்து வந்துள்ளனர். இவர்களை பிடிக்க தனிப்படை போலீசாரின் ஒரு குழு மதுரை சென்றுள்ளனர். இவர்களை பிடித்தால் தான் குற்றவாளிகள் யார் என தெரியவரும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com