பிரதமர் மோடி கலந்துகொண்ட பிரச்சார மேடையில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜ் பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசிய மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜிக்கு கட்சியின் சார்பில் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி கலந்துகொண்ட பிரச்சார மேடையில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜ் பேச்சு
Published on

திருப்பத்தூர் தொகுதி மக்கள் உற்சாகம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசிய மதுரை பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜிக்கு கட்சியின் சார்பில் பேசும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்த பிரமாண்டமான மேடையில், பல லட்சக்கணக்கான தொண்டர்கள் முன் மருது அழகுராஜ் பேசும்பொழுது,

என் அன்புப் பெரியோர்களே நடைபெறக்கூடிய தேர்தலில் அண்ணன் எடப்பாடி யார் அவர் நல்லாட்சியில் நாடு தரவேண்டிய சான்றுதான் இந்த ஒருவிரல் புரட்சியை வாக்களிப்பதற்கான இருவிரல் சின்னமும் தாமரை உள்ளிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு வரப்போகின்ற வாக்கு.இந்த தேர்தலை பொறுத்தவரை நல்ல அரசாங்கத்தை நடத்தி இன்று வருகிற வழியில் ஒருவரிடம் கேட்டேன் உங்கள் அண்ணன் எவ்வளவு பொங்கல் பரிசு கொடுத்தார் என்று அந்த பெண் சொன்னார் ஒரு நூறு ரூபாய் கொடுப்பார் அதுவும் எங்கள் அண்ணன் மனைவி கொடுக்க மறுத்து குறைத்து கொடுக்க சொல்லிவிட்டார் ஆனால் உடன்பிறவா அண்ணன் எடப்பாடி யார் எவ்வளவுகொடுத்தர என்று கேட்டேன் உடனே சிரித்துக் கொண்டே சொன்னார் 2500 கொடுத்தார் என்று அதுமட்டுமின்றி முன்பெல்லாம் முழக்கரும்பு கொடுப்பார்கள் இப்போது அண்ணன் எடப்பாடி ஆட்சியில் முழு கரும்பு கொடுத்துள்ளார்கள் என்று சொல்லிவிட்டு அவர்கள் சொன்னார்கள் இனிப்பு தந்த்தற்கு நாங்களும் இந்த தேர்தலில் இனிமை தரப் போகிறோம் என்று சொன்னார் என் அன்புப் பெரியோர்களே இங்கே அமைந்திருக்கக் கூடிய கூட்டணி வெற்றிக் கூட்டணி உலக வல்லரசு தேசமாக மாற்றிக் காட்டி இருக்க கூடிய பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் கூட்டணிகள் இந்திய தேசியம் ஒரு பாதுகாப்பதற்கு வேலுநாச்சியாருக்கு கிடைத்துவிட்டது போல வெவ்வேறு வயிற்றில் பிறந்தாலும் ஒரு தாய் பிள்ளைகளாக இன்றைக்கு அண்ணன் இபிஎஸ் ஓபிஎஸ் தமிழகத்தை பாதுகாக்கின்ற நிலை தமிழகம் பாதுகாப்பு உள்ளது தாய் நாடும் பாதுகாப்புடன் உள்ளது தமிழகம் பாதுகாப்புடன் உள்ளது . மற்றவர்களை நினைத்தாலே பொங்கு தமிழ் பேசும் கோவையில் குண்டுவெடிப்பு தாமிரபரணி நதிக்கரையில் கூலி உயர்வு கேட்டதற்காக 17 உயிர்கள் தாமிரபரணி ஆற்றில் கொலை செய்தவர்கள் தாய் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் என்ன செய்வார்கள் உத்தம பிரதமர் நரேந்திர மோடி அரவணைப்போடு தமிழகத்தில் நல்லாட்சி மீண்டும் 2021ல் கொண்டு எடுத்துச் செல்வதற்கு நீங்கள் எல்லாம் நிலைகொண்ட இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு விடைபெறுகின்றேன் என்று பேசினார்.பிரதமர் கலந்துகொண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசக்கூடிய வாய்ப்பு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மருது அழகுராஜிக்கு கிடைத்ததற்கு, அவருடன் சென்ற தொண்டர்களுக்கும் திருப்பத்தூர் தொகுதி அ.தி.மு.க.வினருக்கும், அதன் கூட்டணிக் கட்சியினருக்கும், மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com