அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தி.மு.க. அரசின் போக்கை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே தி.மு.க. அரசின் போக்கை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தனபால், வாசுதேவன், மனோகரன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வந்த்ராவ், ஆனூர் பக்தவத்சலம், வேலாயுதம், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் தேர்தல் வாக்குறுதிபடி தி.மு.க. அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்காமல் உள்ளதை கண்டித்தும் பணிதள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்யக்கூடாது எனவும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வழியாக செய்யப்படும் அனைத்து ஒப்பந்த பணிகளை ஆளும் கட்சியினரே எடுத்து கொள்வதை கண்டிக்கும் வகையில் கண்டன வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் தினேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், ராகவன், விஜயரங்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com