அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து ஒற்றுமை இல்லை நாஞ்சில் சம்பத் பேட்டி

அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கருத்து ஒற்றுமை இல்லை என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து ஒற்றுமை இல்லை நாஞ்சில் சம்பத் பேட்டி
Published on

தஞ்சாவூர்,

1989-ம் ஆண்டு தேர்தல் முதல் நான், தேர்தல் களத்தில் உள்ளேன். ஆனால் இப்போது உள்ள வரவேற்பை போல் எப்போதும் இருந்தது இல்லை. மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். அதே போல மோடி ஆட்சிக்கு ஜாடியாக உள்ள கட்சிக்கும் முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணி என்பது அல்ல. அவர்களின் எண்ணம் வலுவாக உள்ளதா? என்பது முக்கியம். அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே கருத்து ஒற்றுமை இல்லை. எனது தொகுதியில் பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று தம்பிதுரை உத்தரவிட்டுள்ளார். எனவே அவர்களிடையே கருத்து ஒற்றுமை, இணக்கம் இல்லாத நிலை உள்ளது.

பா.ஜ.க. 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். அவர் பியூஸ் கோயல் அல்ல, நவீன கோயபல்ஸ். அதை நாங்கள் ஏற்கவில்லை. உத்தரபிரதேசத்தில் யோகி முதல்-அமைச்சராக இருக்கும் தொகுதியில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. எனவே அவர்கள் தங்களை தக்க வைப்பதற்கான கருத்து திணிப்பு இது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com