வைப்பூர்- பேரிஞ்சம்பாக்கம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வைப்பூர்- பேரிஞ்சம்பாக்கம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைப்பூர்- பேரிஞ்சம்பாக்கம் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் இருந்த ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பேரிஞ்சம்பக்கம் நோக்கி செல்லும் ஒன்றிய சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக பழுதடைந்த நிலையில் உள்ளது. பேரிஞ்சம்பாக்கம் தத்தனூர்-வைப்பூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் இருந்து செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். ஒரகடம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் தொழிலாளிகள் மோட்டார் சைக்கிளில் சாலையில் வரும்போது மண் புழுதி போல் பறக்கிறது.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் அவசர சிகிச்சைக்காக செல்ல வேண்டும் என்றால் ஆம்புலன்ஸ் வருவதற்கு சாலை சரியில்லாததால் தாமதமாகிறது. இதனால் கர்ப்பிணிகள், நோயாளிகள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள வைப்பூர் பேரிஞ்சம்பாக்கம் செல்லும் சாலையை குன்றத்தூர் ஒன்றியம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு ஒன்றிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com