

நெல்லை,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் பாலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் குமாரசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
புதிய ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில் 21 மாதம் நிலுவையாக உள்ள தொகையை உடனே வழங்க வேண்டும். அரசு உத்தரவுப்படி சி, டி. பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், தகுதி உடைய ஓய்வூதியர்களுக்கும் உடனே பொங்கல் அன்பளிப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முத்துகிருஷ்ணன், நெடுஞ்செழியன், ஆறுமுகம், செந்தில் ஆறுமுகம், கோபாலன், அபுபக்கர், ராஜேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.