குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் ஊர்வலம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் ஊர்வலம் நடந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் ஊர்வலம்
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பு, இஸ்லாமிய அமைப்புகள், உலமாக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் நெளஜவான் கமிட்டி இணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டி தலைவர் முஸ்தாக் அகமத் தலைமை தாங்கினார்.

அனைத்து பள்ளி வாசல் தலைவர்கள், அனைத்து உலமாக்கள், இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளரும், பைத்துல்மால் மாவட்ட தலைவருமான நவாப் வரவேற்றார்.

திரளானோர் பங்கேற்பு

இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. பங்கேற்று கண்டனவுரையாற்றினார். இதில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் நூர்முகமது, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அஸ்கர்அலி, காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட அமைப்பாளர் அன்வர், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் சனாவுல்லா, திப்புசுல்தான் பேரவை மாநில தலைவர் சித்திக், முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ரகமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அமீன் நன்றி கூறினார்.

இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கோட்டை ஷாஹி மஸ்ஜித்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடந்த அண்ணா சிலை அருகில் வந்தடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com