

சிவகங்கை,
சிவகங்கை சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக பிஆர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நேற்று மாலையில் அவர் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரனுடன் சேர்ந்து சிவகங்கையில் உள்ள பெரிய பள்ளி வாசலான வாலாஜாபள்ளி வாசலில் சென்று வாக்குகள் சேகரித்தார் அவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த நான் எவ்வாறு முஸ்லிம் சகோதரார்களுடன் இணக்கமாக இணைந்து செயல்பட்டேனோ அதைபோல நமது வேட்பாளர் செந்தில்நாதனும் செயல்படுவார். உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். எனவே அவருக்கு ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் செந்தில்நாதன் பேசியதாவது, நான் எப்பொழுதும் உங்கள் சகோதரனாக இருப்பேன் உங்களுடன் இணைந்து செயல்படுவேன் எந்தவித வேறுபாடும் இல்லாமல் உங்கள் தேவைகளை கோரிக்கைகளை நிறைவேற்ற பக்கபலமாக இருப்பேன்எனக்கு உங்களின் ஆதரவை அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சிவகங்கை நகரில் அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். வேட்பாளருடன் நகர் செயலாளர் என்.எம்.ராஜா, முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுணன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் காஜாமுகைதீன் நகர் பொருளாளர் சிக்கந்தர் மற்றும் ஷாஜகான் ஜாகிர், ரகமதுல்லா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.