ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
Published on

வாணியம்பாடி,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த முகாம்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ், மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாணியம்பாடி நியூடவுனில் உள்ள நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்து, வாக்காளர்களிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். கலெக்டருடன் தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், நகராட்சி பொறியாளர் கோபு, மேலாளர் அப்துல்அஜீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மைய பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஒன்றிய ஆணையாளர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, வசந்தி மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர். இதேபோல் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடந்தது. இதில் இளைஞர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.

ஆம்பூர் அருகே மாராப்பட்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அங்கிருந்த படிவங்களை வாங்கி பார்வையிட்டார். ஆய்வின் போது ஆம்பூர் தாசில்தார் சுஜாதா மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com