புதுஆற்றங்கரையில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை, மதுரை காப்பகத்தில் ஒப்படைப்பு

புதுஆற்றங்கரையில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை, மதுரை காப்பகத்தில் ஒப்படைப்பு
புதுஆற்றங்கரையில் அனாதையாக கிடந்த ஆண் குழந்தை, மதுரை காப்பகத்தில் ஒப்படைப்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை புது ஆற்றங்கரையில் துணிப்பையில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தை அனாதையாக கிடந்தது. அந்த குழந்தையை போலீசார் மீட்டு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். தற்போது அந்த குழந்தை மாவட்ட சமூக நல அலுவலர் மூலம் மதுரையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைக்கு உரியவர்கள் யாரேனும் இருப்பின் தங்களது ஆட்சேபணையை 21 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி.நகர், தஞ்சை-613007 என்ற முகவரிக்கு நேரில் வந்தோ அல்லது 04362-237014 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தெரிவிக்கலாம். ஆட்சேபணை எதுவும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் இந்த குழந்தையை தத்துக்கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தத்துக்கொடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com