மேல்மருவத்தூரில் கோ.ப.அன்பழகன் பிறந்த நாள் விழா

மேல்மருவத்தூர் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத் தலைவர் கோ.ப.அன்பழகன் பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது
மேல்மருவத்தூரில் கோ.ப.அன்பழகன் பிறந்த நாள் விழா
Published on

பிறந்த நாள் விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார்-லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரின் மூத்த மகன் கோ.ப.அன்பழகன் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் ஆரம்பித்து ஏழை, எளியவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, கறவை மாடு வழங்குவது, மிதிவண்டி, மொபட், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இவரது பிறந்த நாள் விழா மற்றும் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 19-ம் ஆண்டு தொடக்க விழா ஆண்டுதோறும் மேல்மருவத்தூரில் உள்ள ஞான பீடத்தில் மிக விமர்சையாக நடைபெறும்.

இந்த நிலையில், நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதையொட்டி, கோ.ப.அன்பழகன் அவரது தந்தை பங்காரு அடிகளார் - லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

கொண்டாட்டம்

அதைத்தொடர்ந்து, மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் ஞான பீடத்தில் அன்பழகனுக்கு ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர். ஞான பீடத்தில் உள்ள விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு தனது பிறந்தநாள் கேக்கினை வெட்டிக் கொண்டாடினார்.

நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆன்மிக இயக்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கோ.ப. அன்பழகனுக்கு சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியினை ஆஷா அன்பழகன், வக்கீல் அகத்தியன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com