வம்பாகீரப்பாளையம், பூரணாங்குப்பத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா

வம்பாகீரப்பாளையம், பூரணாங்குப்பத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வம்பாகீரப்பாளையம், பூரணாங்குப்பத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா
Published on

புதுச்சேரி,

புதுவை வம்பாகீரப்பாளையம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் 24-ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

நாளை (திங்கட்கிழமை) அன்னவாகனத்திலும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) யானை வாகனத்திலும், 26-ந்தேதி ரிஷப வாகனத்திலும், 27-ந்தேதி குதிரை வாகனத்திலும் அம்பாள் வீதியுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா 28-ந் தேதியும், 29-ந்தேதி இரவு தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் மீனவ கிராம கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

பூரணாங்குப்பம்

இதேபோல் பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுண்ணாம்பு ஆற்றங்கரையில் இருந்து கரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் மயானக் கொள்ளை வருகிற 28-ந் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் எழில்ராஜா, துணைத்தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமிர்தலிங்கம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com