காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி-மவுன ஊர்வலம்

காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடந்தது.
காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி-மவுன ஊர்வலம்
Published on

கூடலூர்,

கூடலூர் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பில், காஷ்மீரில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கூடலூரில் நடந்தது. இதையொட்டி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள சங்க அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இதற்கு சங்க தலைவர் தமிழரசு தலைமை தாங்கினார்.

அரசமர வீதி, எல்லைத்தெரு, பழைய காய்கறி மார்க்கெட் வீதி, மெயின் பஜார், காமாட்சியம்மன் கோவில் தெரு, பொம்மச்சி அம்மன் கோவில் தெரு, தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தை ஊர்வலம் வந்தடைந்தது. இதில் பங்கேற்ற அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். முடிவில் உயிரிழந்த ராணுவவீரர்களின் படங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல் தேனி அருகே பூதிப்புரம் கிராமத்தில் துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. கிராம மக்கள் ஊர் நுழைவு வாயிலில் இருந்து மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மெழுகுவர்த்திகளை மொத்தமாக ஒரே இடத்தில் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தேனி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில் தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில், ராணுவ வீரர்களின் புகைப்படங்களின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com