அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது.
சைக்கிள் போட்டியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 292 பேரும், மாணவிகள் 98 பேரும் பங்கேற்றனர்.