

குடியாத்தம்,
குடியாத்தம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வி.என்.தனஞ்செயன், ஆர்.மூர்த்தி, மகாலிங்கம், தேவராஜ், முன்னாள் நகரசபை தலைவர்கள் பாஸ்கர், அமுதா, துணைத்தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எஸ்.என்.சுந்தரேசன், அன்வர்பாஷா, குமரன், சரவணன், அம்மன்சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாவிற்கு ஒன்றிய செயலாளர் வி.ராமு தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் மோகன், மூர்த்தி, தேவிகா, குமுதா, திராவிடமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கள்ளூர் பலராமன், ஒன்றிய பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடி, தொழிற்சங்க கொடி ஏற்றி வைத்து, அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
ஆம்பூர் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பஸ்நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு நகர செயலாளர் எம்.மதியழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அரசு வக்கீல் ஜி.ஏ.டில்லிபாபு, மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஆர்.வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் அண்ணா உருவப்படத்தை வைத்து பஜாரில் இருந்து பஸ்நிலையத்திற்கு ஊர்வலமாக வந்து நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆனந்தன், எல்.பி.எப் தொழிற்சங்க மதி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆம்பூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் சமரசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கழகம் சார்பில் செய்தி தொடர்பாளர் சிவக்குமார் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாதனூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிராமலிங்கராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாதனூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கே.வி.குப்பத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் தேவன், துணை செயலாளர் ரோஸ்மேரிவஜ்ஜிரம், பொருளாளர் கோபி, மாவட்ட பிரதிநிதிகள் சொக்கலிங்கம், சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய அவைத்தலைவர்கள் சேகர், ஏழுமலை ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய துணை செயலாளர் என்.இ.சத்யானந்தம், நிர்வாகிகள் மனோஜ்குமார், சாவித்ரி, முரளிதரன், ஆ.குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணா உருவ சிலைக்கு எஸ்.காத்தவராயன் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் அமலுவிஜயன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகர தி.மு.க. அவைத்தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணா படத்திற்கு மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பிரேமா கோபாலகிருஷ்ணன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என்.விஜயகுமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஜி.எஸ்.அரசு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ம.மனோஜ், மாவட்ட பிரதிநிதி எஸ்.டி.யுவராஜ், நகர மாணவரணி அமைப்பாளர் நவீன்சங்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடியில் உள்ள மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திலும், எம்.எல்.ஏ. அலுவலகத்திலும் நகர செயலாளர் சதாசிவம் தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குமார், நகர அவைத்தலைவர் சுபான், பொருளாளர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வள்ளிப்பட்டு கிராமத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் தலைமையில் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயசக்தி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
ஆலங்காயம் பஸ்நிலையத்தில் அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. செயலாளர் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.