வெறிச்சோடிய சாலைகளில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

வெறிச்சோடிய சாலைகளில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.
வெறிச்சோடிய சாலைகளில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
Published on

தளவாய்புரம்,

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றுமுன்தினம் மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக பல பகுதிகளில் விழிப்புணர்வு பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடந்தன. செட்டியார்பட்டி பேரூராட்சியில் காய்கறி மார்க்கெட் உள்பட அனைத்து தெருக்களிலும் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது. மேலும் முக்கிய இடங்களில் கொரோனா விழிப்புணர்வு பலகை வைக்கப்பட்டது.

இதில் செட்டியார்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் அங்குத்துரை, பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அழகர் செய்து இருந்தார்.

நரிக்குடி அருகேயுள்ள அழகாபுரி கிராமத்தில் அய்யனார் கோவில் பகுதியில் கிராம இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். மேலும் மரக்கன்றுகளையும் நட்டனர்.

சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு துறை உத்தரவின் பேரில் வங்கி பணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள் என அனைவருக்கும் முககவசம், கை உறை ஆகியவைகளை சேத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் பட்டுராஜன் வழங்கினார். அப்போது வங்கி செயலாளர் (பொறுப்பு) மணிமேகலை, முதுநிலை எழுத்தர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊரடங்கு உத்தரவினால் வெறிச்சோடிய முக்கிய சாலைகளில் டிராக்டர் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் அதிகம் நடமாடிய சாலைபகுதிகளில்டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளித்து வருகிறோம். ஏற்கனவே நகராட்சி பஸ் நிலையம் முழுவதும் தெளித்து விட்டோம்.

தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com