அதிர்ஷ்டத்துடன் திறமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆகலாம் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி

அதிர்ஷ்டத்துடன் திறமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆகலாம் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கூறினார்.
அதிர்ஷ்டத்துடன் திறமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆகலாம் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேட்டி
Published on

கொப்பல்,

எங்கள் கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. போல் நான் அறிவாளி கிடையாது. முழுமையான கர்நாடகத்தை ஆட்சி செய்யும் திறன் வட கர்நாடகத்திற்கு உள்ளது. யத்னாலுடன் பேசுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். வட கர்நாடகத்தில் எதிர்பாராத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது. மந்திரிகள் அங்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை முதல்-மந்திரி எடியூரப்பா பிறப்பித்துள்ளார். அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில மந்திரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இந்த வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

முதல்-மந்திரி ஆகலாம்

வெள்ள பாதிப்புகளை மந்திரிகள் யாரும் ஆய்வு செய்யவில்லை என்று காங்கிரசார் கூறுகிறார்கள். முன்பு காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது, கர்நாடகத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியை விட தற்போது மோடி ஆட்சியில் அதிகளவில் இழப்பீடு கர்நாடகத்திற்கு கிடைத்துள்ளது. அதிர்ஷ்டத்துடன் திறமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரி ஆகலாம்.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com