அடையாறு தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சிக்கு அனுமதி

காலை மற்றும் மாலை வேளைகளில் அடையாறு தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்ள விண்ணப்ப படிவத்தை தொல்காப்பிய பூங்காவின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அடையாறு தொல்காப்பிய பூங்காவில் நடைபயிற்சிக்கு அனுமதி
Published on

தமிழக அரசு, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா என்ற சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கி, பராமரித்து வருகிறது. நகரிய கடல்சார் ஈரப்புலங்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பின் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள ஏதுவாக, தொல்காப்பியப் பூங்காவை பொதுமக்கள் பார்வையிட வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது, தொல்காப்பிய பூங்காவில், பொதுமக்கள் கட்டணத்துடனான நடைபயிற்சி மேற்கொள்ள, காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரை மற்றும் மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளனர். நடைபயிற்சி மேற்கொள்வதற்கான விண்ணப்ப படிவத்தை தொல்காப்பிய பூங்காவின் இணையதளத்தில் www.chennairivers.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது சென்னை ராஜா அண்ணாமலைபுரம், எண்-6/103, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள பூங்கா அலுவலகத்தில் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். 044-2461 4523, 97865- 58397 மற்றும் 98408- 13321 இந்த எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை முதன்மை செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் டாக்டர் எஸ்.ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com